விருதாச்சலம்:

பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிளை உரிமையாளர்களின் உண்மை முகத்தை ‘ஜியோ நியூஸ் தமிழ்’ தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருவதால், நிலை குலைந்துபோன ‘VK Promotion’ தரப்பு, தற்போது செய்தியை முடக்குவதற்காக ஜியோ நியூஸ் தமிழ் ஆசிரியருக்கு நேரடி மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளது.
உண்மைகளைக் கேட்டால் தற்கொலை மிரட்டலா?
ஜியோ நியூஸ் தமிழ் செய்திப் பிரிவு, விருதாச்சலம் கிளை விவகாரம் தொடர்பாகச் சட்டப்பூர்வமான கேள்விகளையும், அரசு அனுமதிகள் மற்றும் உரிமங்கள் (Government Approvals) குறித்துக் கேள்விகளையும் எழுப்பியிருந்தது. இதற்குப் பதில் சொல்ல முடியாத ‘VK Promotion’ தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர், இன்று ஜியோ நியூஸ் தமிழ் ஆசிரியருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
அரசு அனுமதிகள் பற்றிக் கேட்டால், “நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டால் நீங்கள்தான் காரணம்” என்று பழிபோடும் நோக்கில் தற்கொலை மிரட்டல் விடுத்து, செய்தியைத் தடுக்கப் பார்த்துள்ளனர். மேலும், சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடியாமல், “வக்கீல் நோட்டீஸ் அனுப்புவோம்” என்றும் பயம் காட்டியுள்ளனர்.
5 லட்சம் கொடுத்து ஏமாந்தும் இன்னும் வக்காலத்தா?
மக்களை ஏமாற்றும் ‘VK Promotion’ நிறுவனத்திடம் 5 லட்சம் ரூபாய் வரை பணத்தைக் கொடுத்து ஏமாந்த நபர்கள், தங்களை ஏமாற்றிய நிறுவனத்தின் மீது சட்டப்படி புகார் அளிக்காமல், தவறைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களை மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தவறு செய்பவர்களுக்குத் துணையாக நின்று, உண்மைகளை மூடிமறைக்கப் பார்க்கும் இத்தகைய மிரட்டல்களுக்கு ஜியோ நியூஸ் தமிழ் ஒருபோதும் அஞ்சாது.
காவல்துறை மற்றும் சைபர் கிரைம் கவனத்திற்கு:
ஒரு பத்திரிகையாளர் தன் கடமையைச் செய்யும்போது, அவருக்குத் தற்கொலை மிரட்டல் விடுத்து செய்தியை முடக்கப் பார்ப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இந்தத் தொலைபேசி மிரட்டல் ஆடியோ மற்றும் மிரட்டிய நபரின் எண்கள் அனைத்தும் தற்போது பத்திரமாகச் சேகரிக்கப்பட்டு, கோவை மற்றும் கடலூர் மாவட்டக் காவல்துறை, சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வப் புகாராக அனுப்பப்பட உள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும் வரை ஜியோ நியூஸ் தமிழ் எளிய மக்களின் குரலாய் தொடர்ந்து ஒலிக்கும்.

More Stories
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை…
ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் மீட்பு…
வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை…