நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்து வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
விஜய்யின் தவெக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என விஜய், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கூறி வருகிறார்கள். அடுத்து விஜய்தான் முதல்வர் என்றும் கூறுகிறார்கள். அது போல் நேற்றைய தினம் கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகின. அதில் ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் விஜய்க்கு 98 – 120 இடங்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மற்றவை ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கத்தில் வெல்ல வாய்ப்பு என்கிறார்கள். ஒரு சில கணிப்புகளில் விஜய் பெரம்பூர் தொகுதியில் மட்டும் வெல்வார் என்கிறார்கள். கருத்து கணிப்புகள் குறித்து நம்பிக்கையில்லாதவர்கள், வெறும் 40 ஆயிரம், 50 ஆயிரம் பேரிடம் கருத்துகளை கேட்டு அவர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என கேட்டு வெளியிட்டால் அது கணிப்பாகிவிடுமா, யதார்த்தம் என இருக்கிறது, மே 4 ஆம் தேதிதான் உண்மை தெரியும் என்கிறார்கள்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த கையோடு விஜய் திருச்செந்தூர் முருகன் கோயில், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டார். தேர்தலுக்கு முன்பு நாகூர் தர்காவுக்கும் அவர் செல்வார் என சொல்லப்படுகிறது. இன்றைய தினம் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை சந்தித்து சில அறிவுரைகளை வழங்கினார். மேலும் தவெக வென்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தாராம். கருத்துக் கணிப்புகள் குறித்து விஜய் எந்த கருத்தையும் சொல்லவில்லை என மரிய வில்சன் (ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர்) தெரிவித்துள்ளார். நீலாங்கரை வீட்டு வாசலில் அவ்வப்போது ரசிகர்கள் குவிந்து விஜய் வெளியே வந்தால் அவர்களை பார்ப்பதுண்டு. இந்த சூழலில் வெள்ளை ஆடை அணிந்த ஒரு மூதாட்டி, பார்ப்பதற்கு ஆன்மீகவாதி போல் இருக்கிறார்.
அவர் வடலூரில் இருந்து வந்திருக்கிறார். விஜய்யை பார்த்தே ஆக வேண்டும் என அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். விஜய் வீட்டின் பிரம்மாண்ட கேட் அருகே உள்ள செக்யூரிட்டியிடம் அந்த கேட் இடுக்குகளில் பேசுகிறார். “விஜய்யிடம் சொல்லுங்கள், நான் அவரை பார்த்தே ஆக வேண்டும். அவரை பார்க்காமல் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். தேவையில்லாமல் விஜய்க்கு கெட்ட பெயரை நீங்கள் உண்டாகாதீர்கள். அவர் பார்க்க முற்பட்டாலும் நீங்கள் விட மாட்டீங்க போல. நான் அவரை பார்த்து ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். அவரிடம் இதை கொடுக்க வேண்டும்” என கையில் ஏதோ கடிதம் போல் வைத்திருக்கிறார். அது கோயில் பிரசாதமா இல்லை வேறு ஏதேனும் முக்கிய பொருளா என தெரியவில்லை.
இந்த மூதாட்டி அங்கு மணிக்கணக்கில் உணவில்லாமல் காத்திருப்பதாக சொல்கிறார். மேலும் வயதான தன்னை அலைக்கழிக்க வேண்டாம். விஜய்யிடம் போய் சொல்லுங்கள் என்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் விஜய்யை பார்த்தே ஆக வேண்டும். எமர்ஜென்சி, வடலூரில் இருந்து சென்னை வந்து 4 பேருந்துகள் மாறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அவரிடம் நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும். உங்களிடம் சொல்ல முடியாது, அவரை பார்க்கவிடாவிட்டால் நான் உண்ணாவிரதம் இருப்பேன். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் விஜய்யும் ஏழைகளுக்கு நிறைய செய்ய வேண்டும். ஏழைகளுக்கு செய்வது இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்” என தெரிவித்தார்.

More Stories
வாக்குப் பெட்டிகளைத் திறந்த பாஜக.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு…
தெற்கு ரயில்வே குட்நியூஸ்… திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி விழாவை காண சூப்பர் வாய்ப்பு..
கிரெடிட் கார்டு நிலுவை தொகையை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு…