திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர்புதூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (54). அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது மனைவி பூர்ணிமா (34), தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஸ்ரீமா(15) என்ற மகளும், சவின் (13) என்ற மகனும் உள்ளனர். மகாலிங்கம் போதையுடன் வீடு திரும்பி பணம் கேட்டு மனைவியை அடித்து உதைத்ததாகவும், இதனால் பூர்ணிமாவின் பெற்றோர் சில மாதங்களுக்கு முன் ரூ.5 லட்சம் கடன் வாங்கி மருமகன் மகாலிங்கத்திற்கு கொடுத்ததாகவும் தெரிகிறது.
இருப்பினும் மீண்டும் பணம் கேட்டு பூர்ணிமாவை அவரது கணவர் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த பூர்ணிமா கடந்த 30ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்ற முயன் மகாலிங்கத்துக்கும் தீக்காயம் ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பூர்ணிமா நேற்று இறந்தார். இதனால் பூர்ணிமாவின் உறவினர்கள் நள்ளிரவு சாலையில் சடலத்தை வைத்து மறியல் செய்து 2 பிள்ளைகளின் எதிர்கால செலவை ஏற்க மகாலிங்கத்தின் குடும்பத்தினர் எழுதி கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
இதற்கு மகாலிங்கத்தின் சகோதரி ஓய்வுபெற்ற எஸ்ஐ சாந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதால் கந்திலி போலீசார் சாந்தியை கைது செய்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!