கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே நள்ளிரவில் நடைபெற்ற காவல்துறை நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. GEN Z திமுக ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த அன்பானந்தத்தை கைது செய்ய போலீசார் முயன்றதாக கூறப்படும் தகவல், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயக்கோட்டை போடம்பட்டியில் வசித்து வரும் அன்பானந்தத்தின் வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் சென்ற காவல்துறையினர், அவரை விசாரணைக்காக தங்களுடன் அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
தகவலின்படி, அன்பானந்தம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சன கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுவே காவல்துறையின் நடவடிக்கைக்கு பின்னணியாக இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததற்காக அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் காவல்துறை பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மறுபுறம், காவல்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
இதையடுத்து, தவெக மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் கருத்து மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் மாவட்ட அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது

More Stories
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 16 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம்:
இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை…
லிவ்-இன் உறவை எதிர்த்த பெற்றோர், தங்கையை கொன்ற மகள்…