April 28, 2026

நடிகர் ஷியாஸ் கரீம் மீது, அவரது பிசினஸ் பார்ட்னரான பெண் ஒருவர் மோசடி மற்றும் பாலியல் புகார்…

மலையாள நடிகர் ஷியாஸ் கரீம் மீது, அவரது பிசினஸ் பார்ட்னரான பெண் ஒருவர் ரூ.65 லட்சம் மோசடி மற்றும் பாலியல் சுரண்டல் புகாரை அளித்துள்ளார். பணத்தைத் திரும்பக் கேட்டபோது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஷியாஸ் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் தொழில் செய்து வந்த அப்பெண், 2024 ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் ஷியாஸ் உடன் அறிமுகமாகியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அஜித் நடித்த “வீரம்” படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் ஷியாஸ் கரீம். தற்போது மலையாள படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மலையாள “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இதோடு எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி மையமும் நடத்தி வருகிறார். இந்தநிலையில் காசர்கோடு மாவட்டம் பெருன்னா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷியாஸ் கரீம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், 11 லட்சம் ரூபாயை பறித்ததாகவும் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஷியாஸ் கரீம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஷியாஸ் கரீம் துபாய்க்கு தப்பிச் சென்றார்.அதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷியாஸ் கரீம் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இந்த தகவல் அறிந்ததும் சுங்கத் துறையினர் அவரைப் பிடித்து சந்தேரா போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சந்தேரா போலீசார் சென்னை வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.