September 10, 2026

சத்தியமங்கலம் அருகே பயங்கர விபத்து – இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி! இருவர் கவலைக்கிடம்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் KMS தோட்டம் பகுதியில் இன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், இரண்டு வாகன ஓட்டிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​மேலும், இந்த விபத்தில் வாகனங்களின் பின்னால் அமர்ந்து பயணித்த இருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed