பிரபல பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் காலமானார். ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அவருடைய பூர்வீகம். அங்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதன் அடிப்படையில் தனது பூர்வீக ஊரான உதய்பூருக்கு சென்றபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் ஆர்.பி.சவுத்ரி. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1998 ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.பி.சௌத்ரி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்துள்ளார் ஆர்.பி.சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் நாட்டாமை, சூரியவம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சவுத்ரி. ராஜஸ்தானில் விபத்தில் உயிரிழந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் உடல் நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது. பல மெகா ஹிட் படங்களைத் தயாரித்த இவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பாகும். திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More Stories
ரேஷன் கடைகளில் கிலோ ரூ.15-க்கு கோதுமை மாவு: தமிழக அரசு அதிரடி முடிவு!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: 4 முதல்வர்களுடன் திரையுலகில் பயணித்த கலை ஆளுமையின் வாழ்க்கைப் பயணம்
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…