சேலம் கிழக்கு தபால் கோட்டத்திற்கு உட்பட்ட பெரியகவுண்டாபுரம் தபால்நிலையத்தில், பொதுமக்களின் சேமிப்பு கணக்குகளில் முறையாக பணத்தை வரவு வைக்காமல், முறைகேடு நடப்பதாக கோட்ட அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து கிழக்கு கோட்ட உதவி கண்காணிப்பாளர் மஞ்சு விசாரணை நடத்தினார். மேலும் அவர், பெரியகவுண்டாபுரம் தபால் நிலையத்திற்கு சென்று ஆர்.டி. சேமிப்பு கணக்குகளை ஆய்வு செய்தார்.
அதில், மாதேஸ்வரி என்ற பெண் கடந்த 29 மாதங்களாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் செலுத்திய நிலையில் மொத்தம் ரூ.1.45 லட்சம் வரவு வைக்கப்படாமல், முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை தபால்நிலைய பொறுப்பு அதிகாரியான ராஜ்குமார் (47) என்பவர் கையாடல் செய்து, சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து ராஜ்குமாரிடம் விளக்கம் கேட்டனர். பின்னர், அவரிடம் இருந்து முறைகேடு செய்யப்பட்ட ரூ.1.45 லட்சத்தை திரும்ப வசூலித்தனர். தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரி ராஜ்குமார் மீது காரிப்பட்டி போலீசில் உதவி கண்காணிப்பாளர் மஞ்சு புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் போலீசார் பொறுப்பு அதிகாரி ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

More Stories
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கண்டனம்: “அரசியலில் நாகரிகமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும்”