வழி கேட்பதில் வாக்குவாதம்
குரோம்பேட்டையில் ஓடும் பேருந்தில் வழி கேட்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இளைஞர் ஒருவர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள எஸ்.எல். நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (74). மின் பணியாளரான இவர், தாம்பரம் MEPZ பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடபழனி நோக்கிச் சென்ற 70-G அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, அதே பேருந்தில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் (25) என்ற இளைஞர், பேருந்தில் உள்ள LED திரையில் ஓடிக்கொண்டிருந்த வழித்தட விவரங்கள் குறித்து சந்திரசேகரனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு சந்திரசேகரன், நான் ஏன் உனக்கு வழி சொல்ல வேண்டும்? எனப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அமர்நாத், முதியவர் சந்திரசேகரனைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த சந்திரசேகரன் பேருந்தின் உள்ளேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த சக பயணிகள், அவரை மீட்டு ஆட்டோ மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்திரசேகரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பேருந்தின் நடத்துநர் ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், குரோம்பேட்டை போலீசார் பொது வெளியில் ஆபாசமாகத் திட்டுதல், கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

More Stories
பிரபல இசையமைப்பாளர் கார் கண்ணாடி உடைப்பு…
நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு நாளைக்கு ஒத்திவைப்பு!
டம்மி துப்பாக்கி காட்டி நகை மதிப்பீட்டாளரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை: திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்…