தர்மபுரி அருகே பிரபல கொள்ளையன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவர் காதல் ஜோடிகளுக்கு பஞ்சாயத்து செய்து வந்த முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள பஞ்சப்பள்ளி அடுத்த பட்டாபி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (27) திருமணமாகாதவர்.
இவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஓசூர், காங்கேயம், சேலம் இரும்பாலை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் டூவீலர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் சத்தியமூர்த்தி மாயமாகினார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் ராணி இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சத்தியமூர்த்தியை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி மாலை சத்தியமூர்த்தி தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது அருந்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நண்பர்களை தொடர்பு கொண்டபோது 5 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதில் சத்தியமூர்த்தியின் நண்பரான நமாண்டஅள்ளியை சேர்ந்த பூதையன் (எ) வெள்ளையன் (27) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!