சென்னை திருவெற்றியூரில் மாம்பழம் விற்ற மூதாட்டியிடம் 500 ரூபாய் போலி பணம் கொடுத்து இளம் பெண் ஒருவர் ஏமாற்றியிருந்தார். அந்த மூதாட்டி கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதை பார்த்து பலரும் அந்த மூதாட்டிக்கு உதவி செய்து வருகிறார்கள். ஒரு இளைஞர், நேற்று போலி ஐநூறு ரூபாய் நோட்டால் ஏமாந்த பாட்டியிடம் ஒரு கிலோ மாம்பழத்தை 3000 கொடுத்து வாங்கி நெகிழ வைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஜெயலட்சுமி எ கடந்த 35 ஆண்டுகளாக சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சீசனுக்கு தகுந்தாற்போல பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துணையாக கணவர் பழ வியாபாரம் செய்து வந்தார். ஆனால் சில ஆண்டுக்கு முன்புத கணவர் இறந்துவிட்டார் . இப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டி பழங்களை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே மருத்துவ செலவையும், வாழ்வாதாரத்தையும் கவனித்து வருகிறார்.
தற்போது கோடைக்காலம் உச்சத்தில் இருக்கிறது. அத்துடன் மாம்பழ சீசன் இருக்கிறது. மூதாட்டி ஜெயலட்சுமி மாம்பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இளம் பெண் ஒருவர் ஜெயலட்சுமியிடம் ரூ.150-க்கு மாம்பழங்களை வாங்கிக்கொண்டு சிறுவர்கள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, மீதி பணத்தையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அந்த ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்த ஜெயலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதனைச் சரிபார்த்தபோது, அது உண்மையான பணமல்ல, வெறும் காகிதம் என்பது தெரிந்தது. பணம் பறிபோனதை நினைத்து மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதார். இது கண்போர்களை நெகிழ வைத்தது. ஜெயலட்சுமி போலி நோட்டைக் காட்டி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

More Stories
6 வயது சிறுவன் அடித்து கொலை: நரபலியா என போலீஸ் விசாரணை…
விவாகரத்துகள் அதிகரிக்க செல்போன்களே முக்கிய காரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கவலை
காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!