பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்து தலை இல்லாத ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பார்மில் சந்தேகம் அளிக்கும் வகையில் சூட்கேஸ் கிடந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேட்பாரற்று கிடந்த சூட்கேசை திறந்து பார்த்ததில் 35 வயது மதிக்கதக்க தலை இல்லாத ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் ரயில்வே எஸ்.பி. ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டு சூட்கேசில் உடலை வைத்து சென்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!