காங்கேயம் அருகே பரபரப்பு: 12 பேருக்கு முறைகேடாக பட்டா வழங்கியதாக புகார் – வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு!

காங்கேயம் | 

​திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக வீட்டுமனை பட்டா வழங்கிய அரசு அதிகாரிகளைக் கண்டித்து, வரும் 10-ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​சர்ச்சையின் பின்னணி என்ன?

​காங்கேயம் அடுத்த பழையகோட்டை ஊராட்சி, கிழக்கு சேமலைவலசு (புதிய மற்றும் பழைய காலனி) பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தைப் அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாகப் பொதுப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தி வந்தனர்.

​இந்நிலையில், அந்த இடத்தில் இருந்த பயன்தரும் தென்னை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி அகற்றிவிட்டு, ஏற்கனவே சொந்த வீடு மற்றும் நிலம் உள்ள 12 தகுதியற்ற நபர்களுக்கு விதிகளுக்குப் புறம்பாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

​அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள்

​இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்  ஆனந்த், வருவாய் ஆய்வாளர் உதயா மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் தங்கவேல் ஆகியோர் மீது பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளனர்:

  • அதிகார துஷ்பிரயோகம்: தகுதியற்றவர்களுக்குப் பட்டா வழங்கியதோடு, அதைக் தட்டிக்கேட்ட பொதுமக்களை மிரட்டியதாகப் புகார்.
  • மிரட்டல்: போராட்டத்தின் அடையாளமாக வீடுகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை அகற்றவில்லை என்றால், காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என கிராம நிர்வாக அலுவலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
  • பாரபட்சமான நடவடிக்கை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சிபிஐ (CPI) கட்சியினர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், அதற்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • ​”திமுகவின் கூட்டணிக் கட்சி என்பதால் அவர்களுக்கு ஒரு நீதியா? சாதாரண மக்களுக்கு ஒரு நீதியா?” என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    ​தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை​அதிகாரிகளின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்து, இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகனிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், வரும் 10-ம் தேதி நாளை  தங்களது:
    1. வாக்காளர் அடையாள அட்டை 
    2. குடும்ப அட்டை 
    ​ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.​சமூக ஒற்றுமை சீர்குலைப்பு?​”கிழக்கு சேமலைவலசு பகுதியில் அருந்ததியர் சமுதாய மக்கள் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். ஆனால், ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கே மீண்டும் பட்டா வழங்கி, மக்கள் மத்தியில் பிரிவினையை வருவாய்த்துறையினரும் உள்ளூர் திமுக நிர்வாகிகளும் ஏற்படுத்திவிட்டனர்” எனப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.​தேர்தல் நெருங்கும் வேளையில், ஒரு கிராமமே வாக்காளர் அட்டையை ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகத்திடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!

தூத்துக்குடி | தமிழக அரசியலில் தென் மாவட்டங்களின் முக்கியத் தொகுதியான தூத்துக்குடியில், அதிமுகவின் முகமாக இருந்தவர் சி.த. செல்லபாண்டியன்   ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர், இன்று மீண்டும் ஒரு கடினமான அரசியல் களத்தைச் சந்தித்து வருகிறார். ​அமைச்சராக உயர்ந்த ‘லக்கி’ பயணம்…

சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!

மதுரை: “திரையுலகில் மின்னும் நட்சத்திரங்களை நம்பி மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டாம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ​மதுரையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *