எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகனும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்கள் உடன் விலகுவதாக அறிவித்துள்ளார். தனக்கு தகுதி இருந்தும் இரு முறை எம்.எல்.ஏ. சீட் மறுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். புரட்சித்தலைவி அம்மாவால் எனக்கு வழங்கப்பட்ட அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர் பதவியை காரணமே இல்லாமல் நீக்கியது எனக்கு அளித்த மிகப்பெரிய துரோகம்.
நான் இந்த கழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கழக பணிக்காக உழைத்து வருகிறேன். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எனக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர், ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் என பல கட்சிப் பொறுப்புகளை வழங்கினார்.
மேலும் அரசுப் பதவியிலான மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் தலைவர், மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர், BSNL மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் என்னை அமர வைத்து மக்களுக்கு நற்பணிகளை செய்ய வாய்ப்பளித்தார். நானும் திறன்பட அம்மா-வின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தேன்.
மேலும் நடந்து முடிந்த அனைத்து சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள், பத்துக்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி மன்ற தேர்தல்களிலும் தமிழ்நாடு முழுவதும் கழகதிற்காக அயராது பாடுபட்டேன். மற்றும் அனைத்து போராட்டங்களிலும், மறியல்களிலும் கலந்து கொண்டு கழகத்திற்காக பாடுபட்டேன்.
பின்பு புரட்சித் தலைவி அம்மாவின் மறைவிற்குப் பின்னர், எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 10 ஆண்டு காலம் எனக்கு மக்கள் பணி செய்ய தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது
புரட்சித்தலைவி அம்மாவால் எனக்கு வழங்கப்பட்ட அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர் பதவியை காரணமே இல்லாமல் நீக்கியது எனக்கு அளித்த மிகப்பெரிய துரோகம். பின்பு இரண்டு முறையும் தகுதி இருந்தும் மக்கள் பணி செய்ய எனக்கு M.L.A சீட் உள் நோக்கத்துடன் தர மறுத்துவிட்டார்.
ஆகவே இவரை பொறுத்தவரை பணத்திற்குத்தான் மரியாதை, எங்களைப்போன்ற கழகத்திற்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது என்று உணர்ந்தோம். ஆகையால் கழகத்தில் எனது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நானும் எனது ஆதரவாளர்களான அடியிற்கண்ட உறுப்பினர்கள் மற்றும் பல கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கழகத்தை விட்டு விலகுவதாக இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

More Stories
சென்னை : வாடிக்கையாளர் போல் நடித்து ரூ.53 லட்சம் நகை திருட்டு: 20 முறை கடையில் கைவரிசை:
தென் மாநிலங்களை தண்டிப்பதா? – உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்துக்கு முதல்வர் விஜய் எதிர்ப்பு…
புழல்: ரூ.1 கோடிக்கு பேரம் பேசி புழல் சிறையில் மதுரை ரவுடியை கொல்ல சதி: