திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 30க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் சென்னிமலையை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (58). இவர் இப்பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொடுதலில் ஈடுபடுவதாக மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரனை கைது செய்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்னப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தற்காலிக ஆசிரியர் பணிக்கு சூளகிரி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அவருடைய செல்போன் எண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய உதவி தலைமை ஆசிரியர் திருப்பதி கைது செய்யப்பட்டுள்ளார்.

More Stories
“கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்… திமுகவை கேள்வி கேட்க அருகதை இல்லை” – திமுக பரந்தாமன்…
“திமுக எம்.எல்.ஏ.விடம் ரூ. 50 கோடி தவெக பேரம் பேசியுள்ளது… ஆளுநர் கொடுத்த பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” – ஆர்.எஸ். பாரதி…
மயிலாடுதுறை : பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு..