அரசு அங்கன்வாடியில் மகனுக்கு அட்மிஷன் போட்ட பெரம்பலூர் கலெக்டர்…

பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில், மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தனது இரண்டு வயது மகன் ஆத்விக் என்பவரை சேர்த்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டாரங்களிலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 491 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்குழந்தைகள் மையங்களின் மூலம் பயனடையும் அனைத்துப் பயனாளிகளும் ‘போஷன் டிராக்கர்’ என்ற பிரத்யேகச் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், இம்மையங்களின் மூலம் அனைத்துக் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தரமான இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 6 மாதம் முதல் 2 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தான இணை உணவு வழங்கப்படுகிறது.

குறிப்பாக, 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இணை உணவு FRS –Facial Recognition System மூலம் வழங்கப்படுகிறது. மேலும், ‘போஷன் டிராக்கர்’ செயலி வாயிலாக, பிறப்பு முதல் 6 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் மாதந்தோறும் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் வளர்ச்சி நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

எனவே, விளையாட்டோடு கூடிய ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்தான உணவு, பாதுகாப்பான சூழல் என அனைத்து வசதிகளும் நிறைந்த அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசு மையங்களில் வழங்கப்படும் இத்தகைய சேவைகளைத் தங்களது குழந்தைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசு அங்கன்வாடி மையங்களில் சேர்க்க பெருமளவில் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சி ஷரண்யா அறி கேட்டுக் கொண்டுள்ளார்.