கோவை மாவட்டம், பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில், திருப்பத்தூரை சேர்ந்த பூவரசன் (30) என்பர் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அந்த பேக்கரி உரிமையாளரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், பூவரசனை கண்டித்துள்ளனர். அதன்பின், 2 மாதத்திற்கு முன்பு வேலையிலிருந்து பூவரசனை நிறுத்தினர். இந்நிலையில், நேற்று இரவு மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடல் அருகே போதையில் பூவரசன் வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை கண்ட, பேக்கரி கடை உரிமையாளரின் இரு மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் என 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் 5 பேர் சேர்ந்து வழிமறித்து, பூவரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பூவரசனை, அந்த 5 பேரும் சேர்ந்து அடித்து கீழே தள்ளினர். நிலை தடுமாறி கீழே விழுந்த பூவரசன், சிறிதுநேரத்தில் இறந்தார். இதையறிந்த மேற்கு ஸ்டேஷன் போலீசார், சம்பவ இடம் வந்து விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், பூவரசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு ஸ்டேஷன் போலீசார், பூவரசனை தாக்கிய 17 வயதுக்கு உட்பட்ட 5 மாணவர்களையும் நேற்று கைது செய்தனர்.

More Stories
தொடர் சர்ச்சையில் சிக்குவதால் அமைச்சர் கீர்த்தனாவின் பதவி அம்பேல்?
மதுரை: குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 பேருக்கு வலை…
விருதுநகர்: வாழ்நாளை நரகமாக்கிய கணவனை எமலோகத்துக்கு அனுப்பிய மனைவி..!