தற்போது சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,900க்கு விற்கப்படுகிறது. இந்த விலையில் இருந்து 80% உயர்வு ஏற்பட்டால், ஒரு கிராம் தங்கம் ரூ.25,000 வரை உயரக்கூடும்.
தங்க இறக்குமதியை தாராளமயமாக்கி வரியை உயர்த்துவது அனைவரையும் பாதிக்கும்” என தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார். மேலும், “தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வால் நாட்டில் தங்கக் கடத்தல் அதிகமாகும். தங்கம் சவரனுக்கு ரூ.2 லட்சத்தை தொட வாய்ப்புள்ளது. மேலும், இறக்குமதி வரி உயர்வு வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் விலை சற்று சரிவைச் சந்தித்திருந்தாலும், ஏப்ரல் மாதம் முதல் அதன் மதிப்பு வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை நோக்கிப் பாயும் என்று அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, 1980-ம் ஆண்டுக்குப் பிறகு தங்கம் சந்தையில் நிகழப்போகும் மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக இது இருக்கும் என்று பீட்டர் ஷிஃப் குறிப்பிட்டுள்ளார். அவரது கணிப்பின்படி, தங்கம் விலையானது ஒரு கிராம் ₹25,000 என்ற நிலையை எட்டக்கூடும் என்றும், ஒரு சவரன் தங்கம் சுமார் ₹2 லட்சம் வரை உயர்ந்து சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இந்தத் தகவல், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களுக்கு லாபகரமாகத் தெரிந்தாலும், நகை வாங்குவோருக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.

More Stories
தவெக அமைச்சர்களுக்கு சபரீசன் வக்கில் நோட்டீஸ்!
அமைச்சர் சரத்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்; தி.மு.க. மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்…
35 கிலோ இனி இல்லை.? – ரேஷன் முறையில் வரப்போகும் புதிய சட்டத் திருத்தம்…