பசு மாட்டின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை வைத்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யத்தை உட்கொண்டால்தான் சார் தம் யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்டில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சகவ்யம் என்ற கலவையை கோயில் நிர்வாகம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. மாட்டு சாணம், கோமியம், பால், நெய், கங்கை நீர் உள்ளிட்டவற்றைக் கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோயிலுக்கு வரும் அனைவரும் இந்த கலவையை சாப்பிட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தின்படி பஞ்சகவ்யம் இல்லாமல் எந்த சடங்கும் நிறைவு பெறாது என்றும், அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல் சனாதனத்தை தாங்கள் பின்பற்றுவதை இந்து அல்லாதவர்கள் நிரூபித்தால் மட்டுமே பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சகவ்யத்தை உட்கொண்டு தங்கள் பக்தியை நிரூபித்தால் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என வந்துள்ள அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More Stories
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!