September 9, 2026

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்: அரசு அறிவிப்பு!

சென்னை:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முன்னுரிமை (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்க்கும் வகையில், மின்னணு ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இப்பணிகளை மேற்கொள்ளும் விதமாக, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் சரிபார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இன்று சிறப்பு முகாம்:

மீதமுள்ள பணிகளை முழுமையாக முடித்து 100 சதவீத இலக்கை எட்டும் நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்) இன்று (ஆகஸ்ட் 29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

  • நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

அரசு வேண்டுகோள்:

இதுவரை ரேஷன் கடைகள் வாயிலாக கைவிரல் ரேகைப் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், இன்று தங்கள் பகுதி நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது கைவிரல் ரேகைப் பதிவை உடனடியாக நிறைவு செய்யுமாறு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You may have missed