November 2, 2026

வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்

வெள்ளைச் சட்டையில், படு மாஸ் லுக்’கில் தான் நிற்கும் புகைப்படங்களை, நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது நடிகர் சிம்புவின், இந்த மாஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அரசன் ப்ரோமோ

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்; வெற்றிமாறன் இயக்கத்தில்; நடிகர் சிம்பு நடிக்கும் படம் “அரசன்”. இப்படத்திற்கான ‘ப்ரோமோ’ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த மாதத்தில் ‘அரசன்’ படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இரண்டு சிம்பு

அரசன் படத்தில் சிம்பு இரண்டு கெட்டப்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ‘ப்ரோமோ’வில் கூட சிம்பு இரண்டு கெட்டப்களில் தோன்றியிருந்தார்.

மாஸ் லுக்’கில் சிம்பு

சிம்பு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வெள்ளைச் சட்டையில், ட்ரீம் பண்ண தாடி, நியூ ஹேர் ஸ்டைல்..” என புது கெட்டப், புது லுக்’கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது.