September 10, 2026

2026ல் கூட்டணி ஆட்சிதான்’ 2024ல் அடித்து சொன்ன அண்ணாமலை!

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இதுவரை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில், இம்முறை புதிய அரசியல் மாற்றமாக தவெக வெற்றி பெற்றது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையை நூற்றுக்கு நூறு சதவீதம் அண்ணாமலை அப்படியே சொல்லி இருப்பதாக சொல்கின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளன. 234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் அடுத்த கட்டமாக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளார்.

தற்போது இருக்கும் சட்டமன்றத்தின் காலம் மே 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் நடைமுறையாகும். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு மிகக் குறுகிய காலமே உள்ளது. பெரும்பான்மை பெற, குறைந்தது 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது 108 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால், மேலும் 10 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.

இதற்காக பல்வேறு கட்சிகளுடன் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சில கட்சிகள் கூட்டணி ஆட்சியில் பங்கேற்க தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், எந்தக் கட்சியும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இடதுசாரி கட்சிகள் (4), தேமுதிக (1) ஆகிய கட்சிகளின் சில உறுப்பினர்கள் ஆதரவு வழங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

2024 2026 காலகட்டத்தில் பாஜக உண்மையாக உழைத்தால் 500 நாட்களுக்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி பணியாற்றினால் 2026 பாஜகவின் காலமாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பு 20 நாட்களுக்கு முன்பு வேட்பாளர்களை அறிவித்தால் அது நடக்காது. இது இரண்டாவது வாய்ப்பு. 2026 தேர்தலில் எந்த கட்சியும் எங்களுக்கு 150 தொகுதி கிடைக்கும், 160 தொகுத்து கிடைக்கும், 180 தொகுதி கிடைக்கும் என சொல்ல முடியாது. பாஜக படுதோல்வி அதெல்லாம் 2021 உடன் முடிந்து விட்டது. 2026 இல் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் பாஜக முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்தால் நிச்சயம் தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக இருக்கும்” என பேசி உள்ளார். அண்ணாமலை அன்று கூறிய கருத்துக்கள் தற்போது உண்மையாகி இருக்கிறது. தற்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் சூழல். இருக்கிறது மேலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் பாஜக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் பாஜக படுதோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed