கயத்தாறு – கடம்பூர் சாலையில் நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகுளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகையா என்பவரது மகன் நரசிம்மன் (65). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த குழியால் நிலைதடுமாறி திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளார். அப்போது பின்னால் லோடுடன் வந்த டிப்பர் லாரி இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்தக் கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நரசிம்மன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கயத்தாறு போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர், சூரியமினிக்கன் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (54) என்பவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஓட்டிவந்த டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

More Stories
அதிமுக உடன் கூட்டணி இல்லை! திமுக திட்டவட்டம்…
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ…
கல்லூரி மாணவியைக் கொலை செய்ய முயற்சி: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…