தம்மபேட்டா என்ற கிராமத்தில் சில மொபைல் ரீசார்ஜ் சேவை வழங்கும் கடைகள் இணைந்து புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ரூ.350 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறை அச்சம் இருக்கும் வேளையில் இத்தகைய சலுகை மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஈர்த்துள்ளது. வேறு நெட்வொர்க்-ல் இருந்து ஏர்டெல்-க்கு மாறி 350 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரீசார்ஜ் சேவை வழங்கும் நபரின் லாபம் பெரிய அளவில் பாதிக்கப்படும், ஆயினும் போட்டியின் காரணமாக இத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஏர்டெல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் மோதல் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானாவில் எரிபொருள் சப்ளை பாதிப்பு இருக்கும் வேளையில் இத்தகைய அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
தெலுங்கானா அரசின் சிவில் சப்ளைத்துறை அதிகாரிகள் எரிபொருள் இருப்பு குறித்து தெளிவாக அறிவித்துள்ளனர். மாநிலத்தில் தினசரி 18,500 கிலோலிட்டர் எரிபொருள் வரத்து உள்ளது. இது சாதாரண பயன்பாட்டு நிலையில் 40 முதல் 45 நாட்கள் வரை பயன்படுத்தும் அளவுக்கு இருப்பு உள்ளது. எனவே சந்தையில் பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும், வதந்திகள் மற்றும் உலகளாவிய செய்திகள் காரணமாக மக்கள் பீதியில் அதிகமாக வாங்கும் நிலை உருவாகியுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளனர். இதேவேளையில் ஆந்திராவில் சுமார் 1500க்கும் அதிகமான பெட்ரோல் பங்க்-கள் எரிபொருள் இல்லாமல் முடங்கியுள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் ஆந்திர அரசு 450 பெட்ரோல் பங்க்-கள் மட்டுமே மூடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரான் மோதல் காரணமாக ஏற்பட்ட அச்சம், தெலுங்கானா உள்ளிட்ட பல இடங்களில் தற்காலிக தேவை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ரீசார்ஜ் செய்யும் ஒரு சாதாரண செலவுடன் பெட்ரோலை இணைத்து விற்பனை செய்வது, வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது

More Stories
சொத்து பிரச்சனைக்காக மனைவியை, நண்பர்களுடன் காரில் கடத்திய கணவர்…
வீடுகள் – விவசாயம் உள்ளிட்ட இலவச மின்சாரத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி மானியம்….
விபத்தில் சிக்கியவரின் உறவுப் பெண்ணை ஆம்புலன்சை கழுவ சொன்ன அவலம்: