புளியந்தோப்பில் 76 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு பட்டாளம் கே.எம்.கார்டன் 1வது தெருவை சேர்ந்தவர் அல்லிராணி (76). இவரது கணவர் இறந்து விட்டார். அல்லிராணிக்கு ராமச்சந்திரன், முரளிதரன், வாசுதேவன், கருணாநிதி என 4 மகன்களும் கீதா என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 4 மகன்களும் அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கீதா, புரசைவாக்கம் பகுதியில் கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அல்லிராணி தனிமையில் வசித்து வருவதால், மகள் கீதா, அவ்வப்போது வந்து தேவையான பணிவிடைகளை தாய்க்கு செய்து விட்டு செல்வார். அதுபோன்று மாலை வந்தார். அப்போது, அல்லிராணி அணிந்திருந்த நைட்டி கிழிந்த நிலையில் இருந்ததை பார்த்து கீதா கேட்டுள்ளார். ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை பின்னர் தாயை குளிக்க வைத்து கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது உடலில் மாற்றங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே மெதுவாக தாயிடம் கேட்டபோதுதான், புளியந்தோப்பு பட்டாளம் கே.எம்.கார்டன் 13வது தெருவை சேர்ந்த மருது என்கின்ற மருதப்பன் (56) என்பவர் மதியம் வீட்டுக்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. கீதா கடும் அதிர்ச்சியுடன் ஆத்திரமடைந்தார். உடனே அல்லிராணியை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார்.
ஆத்திரம் பொங்க, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கீதா புகார் அளித்தார். உடனே போலீசார், மருது வீட்டிற்கு விரைந்தனர். அங்கு அவர் இல்லை. அங்கிருந்தவர்களிடம், ‘மருதுவுக்கு போன் செய்து உங்களை தேடி போலீசார் வந்துள்ளனர் என கூறுங்கள்’ என்றனர். அவர்களும் தொடர்பு கொண்டபோது, எந்தவித பதிலும் வரவில்லை. வீட்டில் இருந்து போன் வந்ததால் உஷாரான மருது தலைமறைவானார்.
இதையடுத்து அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கண்காணித்தனர். அவர், கூடுவாஞ்சேரி அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று மருதுவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், மருது பிளம்பர் வேலை செய்து வருகிறார். 12 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இவர்களுக்கு 3 மகன்கள். அவர்களில் ஒருவர் மனைவியுடனும் மற்ற 2 பேர் மருதுவுடனும் வசித்து வருகின்றனர். மூதாட்டி தனிமையில் இருந்ததை அறிந்து மருது, அவரது வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மருது மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More Stories
மதுரை பாப்பாபட்டி கிராமத்தினர் ஜனநாயகன் படத்திற்கு எதிர்ப்பு…
அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,034 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!
சென்னையிலிருந்து புல்லட் ரயிலில் பெங்களூரு செல்ல ஜஸ்ட் ஒன்னேகால் மணிநேரம் தான்.. .!!