வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட போலீஸ் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் தஞ்சாவூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன்(56). சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அரசு ஊழியர் இணைந்து, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயத்திற்காக ‘‘வாட்ஸ்அப் குரூப்’ ஒன்று உருவாக்கியுள்ளனர். இந்த குரூப்பில் பெண்கள் குறித்த அவதூறான ஆபாச வீடியோ ஒன்று பரவியதாக கூறப்படுகிறது. இது அந்த குரூப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, ஆபாச வீடியோவை பரப்பியவர் யார் என விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுதொடர்பாக மாநகர போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவை குரூப்பில் ஷேர் செய்தது எஸ்எஸ்ஐ செந்தாமரை கண்ணன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் காமினி நேற்று அதிரடி உத்தரவிட்டார்.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு