September 10, 2026

வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு…

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு பணிகளில் சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், ரஹமத் நகர், ரோஸ்மேரி பள்ளி உள்ளிட்ட ஏழு இடங்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திடீரென பழுதாகி செயலிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் இந்த கோளாறுகள் ஏற்பட்டதால், வாக்காளர்கள் சில நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. இதனால் சில வாக்குச்சாவடிகளில் சிறிய அளவில் பரபரப்பு நிலவியது. எனினும், தேர்தல் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு பழுதான இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களை பொருத்தினர்.

மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில், “பழுதான இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டு, வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு வாக்கும் பாதிக்கப்படவில்லை” என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.மேலும், தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை விரைவாக சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், வாக்காளர்கள் அமைதியாக வரிசையில் நின்று அவர்கள் தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

You may have missed