நாமக்கல் மாவட்டத்தில் போதமலை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு தனித்தனியாக 3 கிராமங்கள் உள்ளன. கீழுர், மேலூர், கெடமலை என்பது தான் அந்த கிராமங்களின் பெயர்களாகும். இந்த பகுதிகள் ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு உள்ளன.
இந்த போதமலையில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் போதை மலையில் வசிக்கும் மக்கள் வாக்களிக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பிற தேர்தல் உபகரணங்கள் தலைச்சுமையாக எடுத்து செல்லப்படும். அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நீண்ட தூரம் வனப்பகுதி வழியாகச் சுமந்து சென்று வாக்குச்சாவடிக்கு செல்வார்கள். சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். இதனால் அதிகாரிகள் அச்சத்துடன் செல்வார்கள். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இப்படி தான் அந்த கிராமங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு வந்தது.
இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சாவடி அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். மேலும் போதைமலை கிராம மக்களும் சாலை வசதி இன்றி சிரமப்பட்டு வந்தனர். அரசு சார்பில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். தற்போது இந்த சிரமத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது சமீபத்தில் அங்கு மண் சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து முதல் முறையாக இந்த தேர்தலில் போதைமலைக்கு மண்சாலை வழியாக வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளன. இது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதுடன், அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையும் நிறைவேறியுள்ளது.

More Stories
சைக்கிளா? அல்லது TVS 50-ஆ? விஜய் என்ட்ரிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
திருப்பூரில் பணப் பட்டுவாடா செய்தியாளர் மிரட்டல் – எஸ்.ஐ-யின் அராஜக செயலால் கொந்தளிப்பு!
போலி ஆவணம் தாயாரித்து 80 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…..