திருப்பூர்:
திருப்பூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடமிருந்து பறக்கும் படையினர் 54 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் காங்கேயம்பாளையம் புதூர் பகுதியில், நவீன் என்பவர் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதாக திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், பறக்கும் படை அதிகாரி முனிராஜ் தலைமையிலான குழுவினர் காங்கேயம்பாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நவீன் மற்றும் அவரது தரப்பினரை சோதனை செய்ததில், கணக்கில் வராத 54,000 ரூபாய் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அந்தப் பணத்தை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமீறல் தொடர்பாக பிடிபட்ட நபர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த இந்த புகார் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு – தம்பதி கைது
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்ச குற்றச்சாட்டு: வழக்கு தொடர்ந்த பெண் வழக்கறிஞர் தவெகவிலிருந்து நீக்கம்