நடிகர் பார்த்திபன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் தன்னை சாதி ரீதியாக அடையாளப்படுத்திக் கொண்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது சாதி, மதம் அற்றவர் என சான்று கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1958 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பிறந்த தனக்கு பிறப்பு சான்று இல்லை எனவும், பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின் சான்றுகளை பெறவில்லை எனவும் தனது ஜாதி, மதத்தை தெரிவிக்கும் பிறப்பு சான்றோ, கல்விச் சான்றுகளோ தன்னிடம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி – மதமற்றவர் என சான்று கோரி வேளச்சேரி தாசில்தாரருக்கு விண்ணப்பித்ததாகவும், அந்த விண்ணப்பம், சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

More Stories
”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்…
இயக்குநர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்
இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு….