மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி ஆகும் ‘நஸ்ரியா’

“நேரம், ராஜாராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா” போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. அவர் அதிகம் மலையாள சினிமா படங்களில் தான் நடித்துள்ளார். நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா. சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 2018-ம் ஆண்டு ‘கூடே’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

கைவிடப்பட்ட திரைப்படம்

இதைதொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு நஸ்ரியா எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் நஸ்ரியா மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். சூர்யா பிரதாப் இயக்கத்தில் உருவாகும் ‘தி மெட்ராஸ் மிஸ்ட்ரி பால் ஆஃப் சூப்பர் ஸ்டார்’ என்ற வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இதில் நட்டி, சாந்தனு, பாக்யராஜ், நாசர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தியாவில் நிகழ்ந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாகி உள்ளது.

Related Posts

தேர்தல் “நையாண்டி மேளா” : நாளை மீண்டும் வெளியாகும் “அமைதிப்படை”

1994ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி, சுஜாதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அமைதிப்படை’. அக்காலகட்டத்தில் இப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைதிப்படை அரசியலில் உள்ள முக்கிய புள்ளிகளை குறிப்பிட்டு எடுக்கப்பட்டது என்றும்; அவர்களை அப்பட்டமாக விமர்சித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *