எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள். இருமுறை தற்கொலைக்கு முயன்றேன் என மனைவி மீது சரமாரி குற்றச்சாட்டு கூறி நடிகர் ரவி மோகன், சென்னையில் கண்ணீர்மல்க பேட்டி அளித்தார். நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், பாடகி கெனிஷாவுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ரவி மோகன் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கேரளாவில் நடந்த கலாச்சார விழா ஒன்றில் அவர்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே ரவி மோகனின் குடும்ப பிரச்னைக்கும், விவாகரத்து வழக்கிற்கும் கெனிஷாதான் காரணம் என்று சமூக வலைத்தளங்கள் உள்பட பல்வேறு தளங்களில் பலராலும் பேசப்பட்டு வருகிறது
இந்நிலையில், அவர்கள் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வருவது, இக்கருத்தை உறுதி செய்வது போல் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், பாடகி கெனிஷா மீது, ரவி மோகன் மனைவி ஆர்த்தி அவதூறு வழக்கு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘கெனிஷா சமூக வலைத்தளங்கள் உள்பட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி குறித்து பேசக்கூடாது’ என்று தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் கெனிஷா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘19 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தினார். அவர் என்னை தாக்கியதில், எனது வயிற்றில் இருந்த 4 மாத குழந்தை கருவிலேயே கலைந்து விட்டது.
அப்போது எனது அடிவயிற்றில் ரத்தம் வழிந்தது. நான் எனது வாழ்க்கையில் அப்பா, அம்மா, குழந்தை உள்பட அனைவரையும் இழந்துவிட்டேன். இதிலிருந்து மீண்டு வருவதற்கு பல போராட்டங்களை சந்தித்தேன். அப்படி இருக்கும்போது, நான் எப்படி இன்னொரு குடும்பத்தை கெடுக்க நினைப்பேன்? ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை. அவரது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுப்பவர் அவர்தான். அப்படி இருக்கும்போது, இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்?’ என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், சென்னையை விட்டே சென்று விடுவதாகவும், இனிமேல் எந்த சோஷியல் மீடியாவிலும் இடம்பெற மாட்ேடன் என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், சென்னையிலுள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்த ரவி மோகன், கண்ணீருடன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு: சாதுவாக இருந்த என்னை நிறையபேர் சீண்டி பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். இத்தனை நாள் நான் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம் என்று நினைக்கிறேன். விவாகரத்து கிடைக்கும்வரை நான் நடிக்க மாட்டேன். சாது மிரண்டால் காடுகொள்ளாது. 23 வருடங்கள் இரவு, பகலாக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 90 சதவீத படங்கள் வெற்றிபெற்றுள்ளன. எனது அப்பாவும், அண்ணனும் 4 வருடங்களாக வேலை செய்யவில்லை. இளம் வயதில் குடும்பத்துக்காக உழைத்தேன்.
எனது குடும்பத்துக்காக நான் இருக்கிறேன். எனது 2 மகன்களையும் பார்க்க விடவில்லை. எனது கடந்த கால வாழ்க்கையில் 14 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். எனது படங்களில் பெண்களின் உரிமைகளை பற்றி பேசியிருக்கிறேன். அப்படிப்பட்ட நான், பெண்களை பற்றி தவறாக பேசுவேனா? எனது தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. எனது மகன்களை நான் எப்படி விட்டுவிடுவேன்? அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால், இன்று எனது மகன்களை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். அவருடனான (ஆர்த்தி) வாழ்க்கை வேண்டாம் என்றுதான் தெறித்து ஓடி வந்தேன். நான் எப்படி ஷூட்டிங்கிற்கு வருகிறேன் என பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். அவரை தயாரிப்பாளராக்கியதே நான்தான். வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான்

More Stories
24 மணி நேரமும் டாஸ்மாக்.. எண்டு கார்டு போட்ட அதிகாரி.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ!
4 பெண்களுடன் திருமணம்: 4வது மனைவியின் மகனை கொன்ற கல்யாண மன்னன்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் கைது…