காஞ்சிபுரம் : போதை தகராறில் மகனை கொடூரமாக கொலைசெய்த தந்தை…

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை (வயது 50). இவர் பூ, மாலை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரின் மகன் ரூபேஷ் (வயது 25). சென்னையில் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே, நேற்று இரவு நேரத்தில் போதையில் வீட்டுக்கு வந்த ரூபேஷ் – தந்தை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஏழுமலை, கத்தியை எடுத்து மகன் ரூபேஷை சரமாரியாக குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரூபேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், ஏழுமலையை கைது செய்தனர்.