தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்சனையால் கூட்டணியில் இருந்து வெளியே வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளார்.

போட்டி இல்லை…

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக வந்ததால் தான், திமுக தங்களை புறக்கணித்ததாக கருதவில்லை என வேல்முருகன் கூறியுள்ளார். தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என்றும் வருங்காலத்தில் தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

திமுக நினைத்தால் தேமுதிக, விசிக, மதிமுகவுக்கும் கூட அதிக தொகுதிகளை கொடுக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். மேலும், 170 தொகுதிகளும் அவர்களுக்கே (திமுகவினருக்கே) என சட்டம் இருக்கிறதா..? என கேள்வி எழுப்பினார்.

நாதக உடன் கூட்டணியா?

தாங்களும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், தங்களுக்கான தொகுதிகளை குறைப்பது ஏன் என புரியவில்லை என்றார். அனைவரும் ஒன்றுக்கூடி, முக்கியமுடிவுகளைள எடுக்க உள்ளனர். த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றும், “நாம் தமிழர் கட்சி”யுடன், எதிர்காலத்தில் தேவையெனில் கூட்டணிகுறித்து சிந்திக்கலாம் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.