தூத்துக்குடி : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த பள்ளி மாணவியின் புகைப்படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை – காவல்துறையை எச்சரிக்கை..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

கடைசி தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  வேடநத்தம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 12ம் வகுபபு பள்ளி மாணவி சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து பள்ளி மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

இதனிடையே இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து சிறுமியின் சடலம் முழுமையாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவல்தறை எச்சரிக்கை

மேலும் உடற்கூராய்வு அறிக்கை, தடய அறிவியல் விசாரணை அறிக்கைக்கு பின்பே பாலியல் குற்றம் நிகழந்ததா என தெரியும் என்றும், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு குழப்பம், அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.