தான் தொடங்கிய புதிய கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” (அபுதமமுக) என்று பெயரை சசிகலா அறிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நகர்வாக இன்று தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம்
கட்சியின் பெயர்:
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அபுதமமுக).
கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்று அறிவித்துள்ளார். இந்தச் சின்னம் ‘ஒற்றுமையை’ குறிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொடி:
கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்கள் கொண்ட கொடியின் நடுவே பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனது கட்சி போட்டியிடும் என்றும் சசிகலா அறிவித்துள்ளார்.
கூட்டுக் குடும்பம் :
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை: இந்தக் கட்சி ஒரு ‘கூட்டுக் குடும்பம்’ போலச் செயல்படும் என்றும், ஏழை எளிய மக்களுக்கான இயக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
”எம்.ஜி.ஆர் எப்படி ஒரு தொண்டரால் தொடங்கப்பட்ட கட்சியில் இணைந்து தனது பயணத்தைத் தொடங்கினாரோ, அதே போன்ற ஒரு சூழலில்தான் நானும் இப்போது இருக்கிறேன்” என்று சசிகலா உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் இந்த புதிய வரவு, அதிமுக மற்றும் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தையோ அல்லது வாக்குகளில் பிரிவினையையோ ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






