அதிமுக ஆட்சிக்காலத்தில் பதியப்பட்ட வழக்குகளில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த வழக்குகள் முடித்து வைக்ககோரி அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணைக்கு வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

வழக்குகளில் சமரசம்
கடந்த 2018ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவின்போது பேனர்கள் சேதப்படுத்தியதாகவும், 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது அப்போதைய அதிமுக அமைச்சர்களை அவதூறாக பேசியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது இருதரப்பினரும் சமரசமாக செல்ல விரும்புவதால் வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






