திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்,  வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

4 தொகுதிகள்

இந்த நிலையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான வைகோ தலைமையிலான மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனிச்சின்னம்

இதில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 தொகுதிகள் டூ 4 தொகுதிகள்:

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.