சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான பிறகு திமுகவில் இணைந்த ஓபிஎஸ் வீட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து விட்டார். அவரது மகனும், அவரது ஆதரவாளரும்; உசிலம்பட்டி எம்எல்ஏவுமான ஐயப்பன் ஆகியோரும் திமுக-வில் இணைந்தனர்.
ஜெ.ஜெ புகைப்படங்கள் நீக்கம்
திமுகவில் இணைந்த உடன் ஓபிஎஸ் தனது வீட்டில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா உடன் எடுத்த புகைப்படங்களை நீக்கம் செய்த விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

மீண்டும் ஜெ.ஜெ புகைப்படங்கள்
“ஓ.பி.எஸ். வீட்டில் மீண்டும் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் பரவியது. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரது வீட்டில் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்னணியில் ஜெயலலிதா படம் பொருத்தப்பட்டு இருந்தது”.
கடந்த வாரம் ஓ.பி.எஸ். வீட்டில் இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த படங்கள் வைக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.






