September 10, 2026

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12பேரின் ஜாமீன் ரத்து : 13ம் தேதிக்குள் சரணடைய உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமின் ரத்து செயப்பட்டுள்ளது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சரணடைய வரும் 13ஆம் தேதி வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமீபத்திய நீதிமன்ற பல்வேறு  உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

​ஜாமீன் ரத்து மற்றும் கால அவகாசம்

​சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

​12 பேரின் ஜாமீன் ரத்து:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. ராஜசேகர், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் விசாரணை பாதிக்கப்படக்கூடும் என்ற காரணங்களால் 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

​யார் அந்த 12 பேர்?

முக்கியக் குற்றவாளியான அஸ்வத்தாமன் உள்ளிட்ட பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார், விக்னேஷ், ராஜேஷ், கோபி மற்றும் குமார் ஆகியோரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

​சரண் அடைய உத்தரவு:

இவர்கள் அனைவரும் வரும் மார்ச் 13-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (முன்னதாக மார்ச் 6-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது).

​விலக்கு:

அதே சமயம், இந்த வழக்கில் தொடர்புடைய அஞ்சலை மற்றும் மலர்க்கொடி ஆகிய இருவரின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த கொலை வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றத் தடையால் மீண்டும் தமிழக காவல்துறையினரே விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed