தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில், தேர்தல் அறிக்கைக்கான இணையதளம் ஒன்றை உருவாக்கி, வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் வரும் என்று கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளனர். சில அரசியல் தலைவர்கள் தங்களின் தேர்தல் அறிக்கையை கொஞ்சம், கொஞ்சமாக வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், தவெகவின் தேர்தல் அறிக்கைக்கு, பொதுமக்களும் தங்களின் பரிந்துரைகளை தெரிவிப்பதற்காக ‘வெற்றித் தமிழ்நாடு’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இணையதளம் வெளியாகியுள்ளது.

“தமிழ்நாட்டின் வருங்காலம் நீங்கள் இல்லாமல் இல்லை. விஜய்யின் ஆட்சி உங்களுக்கானது மட்டுமல்ல. உங்களுடைய பரிந்துரைகளாலும் ஆனது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் பரிந்துரைகளை தெரிவிக்க tvkmanifesto2026.com இந்த இணையத்தளத்தில் பதிவிடுங்கள் என்று தவெக சார்பில் கூறப்பட்டுள்ளது.






