September 10, 2026

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் – நடிகர் எஸ்.வி சேகர் அறிவிப்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் அறிவித்துள்ளார்

அரசியல் தொடர்பாக பேசிய அவர், “நடிகர் விஜய், சிபிஐ விசாரணைக்கும்; விமான பயணத்துக்கும் மட்டுமே குறித்த நேரத்தில் செல்கிறார். கரூரில் நடந்த கூட்டத்துக்கு, அவர் தாமதமாக சென்றதாலேயே, அங்கு பெரிய சோகம் ஏற்பட்டது” என்று குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும், “செங்கோட்டையன்,  கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில், தவெக, சார்பில் போட்டியிட்டாலும், அவர் அங்கு வெற்றி பெறுவது சிரமம் என்றும் அதே போல, அதிமுகவும் வெற்றி பெறாது என்றும் எஸ்.வி.சேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவுக்கு 3% ஓட்டு மட்டுமே உள்ளது. அண்ணாமலை கூறுவது போல், 11 சதவீதமெல்லாம் கிடையாது” என்று விமர்சித்தார்.

“வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறேன் என்றும் அரசியலில் நடிகர் விஜய் தோல்வியடைவார்” என்றும் நடிகர் எஸ்.வி. சேகர் குறிப்பிட்டு பேசி உள்ளார்.

எஸ்.வி.சேகர் கடந்த காலங்களில் திமுகவிலிருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து பாஜகவுக்கும், தற்போது மீண்டும் திமுகவுக்கு வந்துள்ளது குறிப்பிட்டுத்தக்கது.

You may have missed