முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் சம்பள உயர்வு குறித்த விவாதங்கள் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இந்த 2025ஆம் ஆண்டு பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவின. ஆனால் தமிழ் சினிமாவை இந்தாண்டு சிறுபட்ஜெட் படங்கள் தான் காப்பாற்றியது. வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பல மலையாள படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பெரிய படங்களும் – தோல்விகளும்

மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட மணிரத்தினம் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் – சிலம்பரசன் நடித்த “தக் லைப்”; இயக்குநர் சங்கரின் “கேம் சேஞ்சர்”, நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி; நடிக்க தனுஷ் மற்றும் நாகார்ஜூனா இணைந்து நடித்த “குபேரா”. தனுஷ் இயக்கி நடித்த “இட்லி கடை” என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

விக்ரமின் “வீர தீர சூரன்”, சூர்யாவின் “ரெட்ரோ”, சூரியின் “மாமன்” உள்ளிட்ட சில பெரிய பட்ஜெட் படங்கள் தங்களின் முதலீட்டை தக்க வைத்துள்ளன.

வெற்றியை தந்த சிறு பட்ஜெட் படங்கள்

ஆனால் இந்த ஆண்டு யாரும் எதிர்பாக்காத “டூரிஸ்ட் ஃபேமிலி; டிராகன்; டியூட், விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி, சுந்தர்.சி-யின் மதகத ராஜா” உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள் மெகா ஹிட் படங்களாக தமிழ் சினிமாவுக்கு அமைந்துள்ளன.

மொத்தத்தில் இந்த ஆண்டு நல்ல கதையாம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்கள் தமிழ் சினிமாவைக் காப்பாற்றி உள்ளது. கதையில் சொதப்பிய பெரிய பட்ஜெட் படங்கள் பெரிய இயக்குநர்கள் – பெரிய நடிகர்கள் இருந்தாலும் தோல்வியை தழுவியுள்ளது.

கதை தான் முக்கியம்

இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் நல்ல கதையை அம்சம் கொண்ட படங்களை தான் எதிர்பார்க்கிறார்கள்! பெரிய பட்ஜெட், பிரம்மாண்டம் என்று இருந்ததாலும் கதையில்லை என்றால் தோல்விதான்! நல்ல கதை தான் நல்ல படத்திற்கு அவசியமென்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.