இந்தோனேசியாவில் சுங்கச்சாவடியில் இருந்த கான்கிரீட் தடுப்புச்சுவரில் மோதி பஸ் கவிழ்ந்து 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து யோகியகர்த்தாவுக்கு 34 பயணிகளுடன் பஸ் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. மத்திய ஜாவாவில் உள்ள செமராங் நகரில் உள்ள கிராப்யாக் சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கான்கிரீட் தடுப்புச்சுவரின் மீது மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்து நடந்த 40 நிமிடங்களுக்குப் பிறகு காவல்துறை மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பஸ் அடியில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு 10 பேர் உயிரிழந்தனர். அருகில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 13 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தலைவர் புடியோனா கூறினார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.