கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்ஷனில் இருந்து நாளை (டிச.23) மற்றும் டிச.30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற டிச.24 மற்றும் டிச.31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண். 06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்ஷன் சென்றடையும்.
ஈரோட்டில் இருந்து நாளை (டிச.23) மற்றும் டிச.30-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற டிச.24 மற்றும் டிச.31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
அதேபோல, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை(டிச.23) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற டிச.25-ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து டிச.25-ம் தேதி மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06573) மறுநாள் காலை 6.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிச.26-ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06574) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






