September 10, 2026

பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ தேர்வு: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

பொங்கல் அன்று நடக்க உள்ள இந்திய பட்டய கணக்காளர் கழக இடையீட்டு இறுதித்தேர்வு தேதிகளை மாற்றி வைக்க வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய கலச்சார திருவிழாவான  பொங்கல் பண்டிகை நாட்களில் பட்டய கணக்காளர் (சி.ஏ) கழக இடையீட்டு இறுதித்தேர்வு தேதிகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வினை எழுதும் விண்ணப்பதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு  இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடசன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது. இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.

எனவே, பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்”  என்று அதில் தெரிவித்துள்ளார்.

You may have missed