September 10, 2026

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 94,720 ரூபாயாக உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கும் வந்தது.அதன் பின்னரும், விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வருகிறது தங்கம். அதிலும் இந்த மாதம் கடந்த 13-ம் தேதி விலை அதிகரித்து வந்து ஒரு சவரன் 95 ஆயிரம் ரூபாயைக் கடந்து, பிறகு விலை குறைந்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் குறைந்து ஒரு கிராம் 11,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது . இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது . கிராமுக்கு 70 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய்க்கு உயர்ந்து தங்கம் ஒரு கிராம்.11,840 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை 95 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 183 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You may have missed