September 10, 2026

கலக்கும் ’96’ நாயகி – ரசிகர்கள் பாராட்டும் கௌரி கிஷன்

பத்திரிகையாளரின் உருவ கேலியால் தாக்கப்பட்ட ’96’ நடிகை கௌரி கிஷனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 மொழிகளிலும் நடித்தவர்

நடிகை கௌரி ஜி.கிஷன் ‘96’ படத்தில் சின்ன வயசு த்ரிஷா ஆக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் முக்கிய பெண் பாத்திரத்தில் நடித்து அசத்தினார். நடிகை கௌரி கிஷான் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஆபாசமாக கேட்ட பத்திரிகையாளர்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர், நடிகை கௌரியிடம் “உங்களின் எடை என்ன இருக்கும்..?” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நடிகை பதில் தெரிவிக்க மறுத்து விட்டார். இருப்பினும் அந்த பத்திரிக்கையாளர் தொடர்ந்து ‘இரட்டை அர்த்ததில்” நடிகையிடம் பேசியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

நடிகைக்கு ஆதரவு

இதனால் நடிகைக்கும்; அந்த பத்திரிகையாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆனால் நடிகை கௌரி கிஷனுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அந்த சர்ச்சைககுரிய பத்திரிக்கையாளருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், கௌரி ஜி.கிஷனின் சமீபத்திய புகைப்படங்களின் மூலம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

 

You may have missed