வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை முன்னிட்டு நவம்பர் 17-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து ஓரிரு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழ்நாட்ல் பருவமழை தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா நோக்கிச் சென்றது. அதன்பின் உருவான, மற்றொரு காற்றழுத்த தாழ்வு மியான்மர் நோக்கிச் சென்றது. புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தான், பருவமழை தீவிரமாகும்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 15) இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் இன்று(நவம்பர் 15) விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நாளை (நவம்பர் 16) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (நவம்பர் 16) கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள்(நவம்பர் 17) கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 17-ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதே போல நவம்பர்18-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.நவம்பர்19-ம் தேதி நீலகிரி,கோவை, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் பெய்ய வாய்ப்பு உள்ளது.