ரரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதற்கு, “குஷ்பு.. ஐட்டம் சாங்” என்று “எக்ஸ் தளத்தில்” குறிப்பிட்டு கேள்விக் கேட்ட ரசிகர் ஒருவருக்கு, நடிகை குஷ்பு கொடுத்த “Thug Reply” இணையத்தில் வைரலாகி வருகிறது.
விலகிய சுந்தர். சி
நடிகர் கமல் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரஜினி படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் இயக்குநர் சுந்தர்.சி விலகியுள்ளார். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.
சொல்லப்படும் காரணங்கள்
இயக்குநர் சுந்தர்.சி கைவசம் வைத்திருக்கும் கதை “காபி கதை” என்றும் சுந்தர்.சி’யிடம் உள்ள கதைக்கு நடிகர் ரஜினிகாந்த் பொருத்தமானவர் இல்லை என்பதால் இயக்குநர சுந்தர்.சி ரஜினி படத்திலிருந்து விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
ஆபாச கேள்விகள்- புகைப்படங்கள்
இந்நிலையில், சுந்தர்.சி யின் மனைவியான நடிகை குஷ்பூவை வைத்து எக்ஸ் தளத்தில் இணையவாசிகள் சிலர் ஆபாசமான கருத்துக்களையும்; எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு கலாய்த்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

குஷ்புவின் “Thug Reply”
படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் சுந்தர்.சி’யிடம், “நடிகை குஷ்பூ உடன் ‘ஐட்டம் சிங்’ (Item Song) ஆட ரஜினி கேட்டிருப்பாரோ?” என்று அஜித் ரசிகர் போல Fake Id வைத்திருக்கும் ஒருவர் இந்த கேள்வியை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவுக்கு நடிகை குஷ்பூ (இல்லை உங்க வீட்டுல யாரையாவது ஆடவைக்களான்னு நினைச்சேன் என்று அவர் Reply கமெண்ட் செய்து “எக்ஸ் தளத்தில்” போட்ட பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.

Fake ஐடி ஆசாமியின் பதில்
அதற்கு அந்த Fake ஐடி ஆசாமி, “எங்க வீட்டுல யாரும் ஐட்டம் Dance ஆட மாட்டாங்க மேடம்..!” என்று மறு கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொரு பதிவில், நடிகை குஷ்பு-வையும், நடிகர் ரஜினியையும் தொடர்புபடுத்தி நகைச்சுவையாக ஆபாசமாக எடிட் செய்யப்பட்ட ஏ.ஐ(AI) வீடியோ ஒன்றையும் பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை குஷ்பூ தமிழக பாஜகவின் துணைத் தலைவர் என்பதையும் தாண்டி அவர், “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்” என்பது குறிப்பிடத்தக்கது.






